அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சரியாக 9:35 மணிக்கு துவடங்கியது. அப்போது முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுக்குழுவிற்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்திதர வேண்டும் என்ற தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். இதனை கே.பிமுனுசாமி வழி மொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 16 தீர்மானங்களை நத்தம் விஸ்வநாதன் முன் மொழிந்தார். இத்தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்தார். அதன்பின் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க செயற் குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க பொதுக் குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் என்னென்ன?…
# அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான கட்சி சட்டவிதி 20அ- ஐ மாற்றம்செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் கழக பொதுச்செயலாளர் என விதி திருத்தம். அ.தி.மு.க.-வில் இருந்து வந்த கழக ஆலோசனைக் குழு இன்று முதல் நீக்கம்.
# அ.தி.மு.க சட்டவிதி 20அ பிரிவு 7ஆம் தேதி பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் பொதுச் செயலாளர் தேர்தல் 4 மாதங்களில் நடத்த வேண்டும். தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் போன்றோர் நியமனம் செய்யப்பட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
# 4 மாதங்களில் அ.தி.மு.க பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்.
# தேர்தல்வாக்குறுதியை நிறைவு செய்யாத திமுக-வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
# அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு யார் போட்டியிட முடியும் என்பது குறித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவி மீண்டுமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
# அத்துடன் புதியதாக துணைப் பொதுச்செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனிடையில் இடைக் கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 4 மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
# இந்த பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
# இத்தேர்தலில் பங்கேற்க 10 வருடங்கள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும்.
# தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 வருடங்கள் பணியறிந்து இருக்க வேண்டும்.
# போட்டி போடுபவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். அத்துடன் 10 மாவட்டச் செயலாளர்கள் வழி மொழிய வேண்டும்.
# மாவட்டச்செயலாளர் 1 வேட்பாளரை மட்டுமே முன்மொழியவும், வழிமொழியவும் முடியும்
# இத்தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம்.
# பின் துணை பொதுச் செயலாளர்களை, பொதுச்செயலாளர் நியமனம் செய்வார்.