அ.தி.மு.க-வில் பிளவுபட்டு இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபடவேண்டும் என்பது எனது விருப்பம் என தஞ்சையில் சசிகலா தெரிவித்து இருக்கிறார்.
தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு சசிகலா பேட்டி அளித்தபோது “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க.வில் பிளவுப்பட்டு உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்நாளில் நான் இதனை சபதமாக ஏற்கிறேன். அ.தி.மு.க-வில் அனைவரும் கண்டிப்பாக ஒன்றாக இணைவோம்.
அனைவரும் ஒன்றிணையவேண்டும் என ஓ.பி.எஸ். சரியாகதான் சொல்லி இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றாகதான் இருக்கிறோம். இது தான் தொண்டர்களின் விருப்பம் ஆகும். பண்ருட்டி ராமச் சந்திரன், எங்கள் கட்சியின் மூத்ததலைவர் என்பதால் அவரை ஓ.பி.எஸ். பார்த்து இருக்கலாம். இதற்கிடையில் தொண்டர்கள் நினைத்தால் கட்சித்தலைமையை நான் ஏற்க தயாராக இருக்கிறேன்” என அவர் கூறினார்.