அதிமுகவில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவில் ஆதிதிராவிடர்களுக்கு பிரதிநிதித்துவம் அழைக்காதது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு குறித்து விமர்சித்துள்ள அவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவின் வாக்கு வங்கியில் மிக முக்கியமான சமூகமாக ஆதிதிராவிடர் சமூகம் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் வழிகாட்டுதல் குழுவில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாதது ஏன் என்று ரவிக்குமார் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவிற்கு வாக்களித்த ஆதிதிராவிடர்கள் தற்போது புலம்புகிறார்கள் என்று ரவிக்குமார் எம்.பி தெரிவித்திருக்கிறார். ஆதிதிராவிட மக்கள் வாக்களிக்க மட்டும்தானா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அதிமுக என்ன பதில் சொல்லும் என்றும் ரவிக்குமார் கேள்வி எழுப்பி இருக்கிறார்.