Categories
பல்சுவை

ஆஃபரோ ஆஃபர்!…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியானா அசத்தல் அறிவிப்பு….!!!

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம் அதன் புதிய ரிசார்ஜ் திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்த திட்டங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1198, ரூ.439, ரூ.269, ரூ.769 ஆகிய புதிய ரீசார்ஜ் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களை‌ பற்றி பார்ப்போம். அதன்படி ரூ.1198 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 3GB‌ டேட்டா, 300 நிமிடம் காலிங் வசதி, 300 எஸ்எம்எஸ் வசதி போன்றவை உள்ளது. இவை ஒரு மாதம் கழித்து மீண்டும் ரெனீவ் ஆகும். பயன்படுத்தாத டேட்டா, எஸ்எம்எஸ் போன்றவை அடுத்த மாதம் சேர்க்கப்பட மாட்டாது. அதனைப் போல ரூ.439 திட்டம் 90 நாட்கள் அல்லது மூன்று மாதங்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

இதில் நமக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் வசதி உள்ளது. இதை எந்த ஒரு டேட்டா வசதியும் இல்லை பேசுவதற்கு மட்டும் தான் போன் பயன்படுத்தபவர்கள் இந்த ரூ.439 திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதனை தொடர்ந்து டேட்டா வார்த்தைகளை தவிர கூடுதலாக BSNL நிறுவன கேம்மிங் வவ்சர் வழங்குகிறது. இதில் ரூ.269 வவுசர் 30 நாட்கள் வரை கிடைக்கிறது. கூடுதலாக 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங், BSNL டியூன்ஸ், எஸ்எம்எஸ் போன்ற வசதிகளும் உள்ளது. இதில் மேலும் கேமிங் சேட்டு இரண்டு லட்சம் வரை பரிசு பெறலாம். மற்றொரு ரூ.769 வவுசர் உள்ளது. இதில் அதே 268 திட்டம் வைத்துள்ள அதே ஆஃபர்கள் இருக்கும். ஆனால் இதன் வேலிடிட்டி மூன்று மாதங்கள் ஆகும். இந்த மேற்கண்ட திட்டங்கள் BSNL வாடிக்கையாளர்கள் விவரமாக தெரிந்து கொள்ளவும் ரீசாஜ் செய்யவும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |