இந்த ஆண்டுக்கான அமேசான் ப்ரைம் டே விற்பனை நேற்று தொடங்கியது. இந்த விற்பனையில் சிறந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் ஆகியவற்றிற்கு பெரும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. வீடு மற்றும் சமையலறை உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் மீது சிறந்த சலுகைகள் உள்ளது. மேக்கப் கிட்ஸ் மற்றும் நகைகள் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
இந்த மெகா விற்பனை நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. அப்போதிலிருந்தே சரியாக 48 மணி நேரம் விற்பனை நடைபெறும். அதாவது இன்று(ஜூலை 24) ஒரு நாள் மட்டுமே. முப்பதாயிரம் புதிய தயாரிப்புகள் மற்றும் 400 இந்திய பிராண்டுகள் மற்றும் சாம்சங், ஜியோமி, இண்டெல் உள்ளிட்ட உலகளாவிய பிராண்டுகள் விற்பனை கண்காட்சியின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும் 120 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் 2000 புதிய தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விலை வரைவிற்கு ஏற்ப தொலைபேசிகளை வாங்கிக் கொள்ள முடியும்.
மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஹெட்ஃபோன்கள் போன்ற கேஜெட்டுகளுக்கு 75% வரை தள்ளுபடி. மடிக்கணினிகளுக்கு ரூ.40,000 வரை சலுகை வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஹெட்ஃபோன்களுக்கு 75% வரை தள்ளுபடி. புளூடூத் வயர்லெஸ் ஹெட்செட்டுகளுக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது.