போர் காரணமாக ரஷ்யாவில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ,ரஷ்யா போர் காரணமாக ரஷ்யாவில் சர்க்கரை, உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உன் மீது போர் தொடுத்த ரஷியா மீது மேற்கு உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் இருந்து வெளியேறி உள்ளது. இதனால் ரஷ்யாவில் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் சர்க்கரை மற்றும் தானியங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஷ்யாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் தடை விதித்துள்ளார். முன்னாள் சோவியத் நாடுகளுக்கு கோதுமை, கம்பு மற்றும் சோளம் ஏற்றுமதி செய்யவும் ஜூன் 30-ஆம் தேதி வரை தடை விதித்துள்ளார். உள்நாட்டு உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்திருக்கிறது.
இதற்கிடையே உக்ரைன், ரஷ்யா போரால், கருங்கடல் பகுதியில் இருந்து வர்த்தகம் தடை பட்டிருப்பதால் இந்தியாவிற்கான பாமாயில் இறக்குமதி 18%மும் , சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 50%மும் சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் சமையல் எண்ணெய் லிட்டருக்கு 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கோதுமை, துவரை எண்ணெய்களின் விலை அதிகரித்து இருப்பதாலும், எரிவாயு விலை உயர்ந்து இருப்பதாலும் உணவுப் பொருட்கள்விலையை நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் பிப்ரவரி மாதத்திலேயே பிஸ்கட் உள்ளிட்ட தனது தயாரிப்புகளுக்கு 3 முதல் 13% வரை விலையை உயர்த்திவிட்டது.