Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி…. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது  18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதையடுத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என ஒன்று சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |