தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுமார் 25 ஆயிரம் மீனவர்களுடைய வாழ்வாதாரம் கருதி கேரளாவில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்களின் படகுகளை பழுது பார்க்க கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எழுதி இருக்கக்கூடிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதத்திற்கு மேலாக பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் முழுமையாக தளர்க்க கூடிய நிலையில், அவர்கள் நேரடியாக கடலுக்கு சென்று மீன்பிடிக்க தயார் நிலையில் இருக்க அவர்களின் படகுகளை முறையாக பழுது பார்த்தல் வேண்டும் .
இதனால் கேரளாவில் இருக்கக்கூடிய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்க கூடிய தமிழக மீனவர்களுடைய படகுகளை பழுது பார்க்க, அவர்கள் கேரள செல்லக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கு போக்குவரத்திற்கான அனுமதியினை கேரள அரசு வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதத்தின் மூலமாக வலியுறுத்தி இருக்கிறார்.