ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், வட்டி, பிற பேமெண்ட்ஸ், முதலீடுகள் ஆகிய சேவைகள் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் மூலம் வங்கி விடுமுறை நாட்களிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் வசதிகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. NACH என்பது NPCI ஆல் இயக்கப்படும் பல்க் பேமெண்ட் சிஸ்டம். இது சம்பளம், ஓய்வூதியம் போன்ற பல பரிமாற்றங்களுக்கு உதவுகிறது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.
Categories