தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி தொடங்கும் நிலையில் அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் 17ம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் தமிழ்நாட்டு மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் புதிய மக்கள் நல திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.