மத்திய அரசுக்கு டிவிடெண்ட் வழங்கியது வழங்குவது குறித்து வரும் 14ஆம் தேதி ரிசர்வ் வங்கி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இதில் உபரி நிதி 52 ஆயிரத்து 637 கோடி ஆகும். எனவே மத்திய அரசு நிதி பற்றாக்குறையை சமாளிக்க டிவிடெண்ட் எதிர்பார்ப்பதாகவும், இது ரிசர்வெட் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தால் கடந்த 5 மாதங்களாக ஒட்டுமொத்த நாடே நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மத்திய அரசை போல மாநில அரசுக்களும் நிதிச் சிக்கல் ஏற்பட்டு திணறி வருகின்றன. இத்தகைய நிலையில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியை நம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.