Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டம் நடைபெறாது…. சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!-

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடைவிதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஆகஸ்ட் 15ம் தேதி சேலம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் அறிவித்துள்ளார்.

Categories

Tech |