இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் வாரத்துக்கு 60 விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கவிருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக பிரித்தானியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் தீவிரமடைந்த கொரோனா பரவல் காரணமாக இந்தியர்களுக்கு கடந்த வாரம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பிரித்தானியாவிற்கு பயணிகள் பலரும் சென்று வருவதால் விமானங்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு பிறகு ரூ.50 ஆயிரம் முதல் 70 ஆயிரமாக இருந்த விமான கட்டணம் ரூ.95,000 முதல் 3 லட்சம் வரை அதிகரிக்க உள்ளது. இதற்கிடையே வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே 30 சிறப்பு விமானங்களை இயக்க இந்திய விமான பயண அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதில் இந்திய நிறுவனங்கள் மற்றும் பிரித்தானிய நிறுவனங்கள் இரு விமான நிறுவன குழுக்களாக 15 விமான சேவைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே 60 விமான சேவைகளுக்கு மத்திய விமான பயண அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதில் இந்திய நிறுவனங்களுக்கு 30 விமான சேவைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஏர் இந்தியாவுக்கு 26 விமான சேவைகளும், விஸ்தாரா ஏர்லைன்ஸூக்கு 4 விமான சேவைகளும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.