Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள்…. தனித்தேர்வர்களுக்கு தேர்வு…. சிபிஎஸ்இ அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலனைக் கருதி கடந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு,அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களின் உயர்கல்வி சேர்க்கையில் சிரமங்களை எதிர் கொள்ளாமல் இருக்கும் பொருட்டு சாத்தியமான வகையில் குறைந்த பட்ச காலத்தில் விரைவாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |