Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 18 முதல் புதிய பொறியியல் பாடத்திட்டம்…. அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு….!!!!

புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பொறியியல் பாடத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக கல்வி குழு கூட்டம் நடைபெற உள்ளது .அந்தக் கூட்டத்தில் புதிய பாடத்திட்டத்திற்கான ஒப்புதல் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆராய்ச்சி ஊக்குவித்தல், தனித்திறனை வெளி கொணறுதல், தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் அமைய உள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறனை ஊக்குவிக்கும் விதமாக பொறியியல் பாடத்திட்டம் 20 வருடங்களுக்குப் பிறகு தற்போது மாற்றப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலாக உள்ளது.

Categories

Tech |