Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 2-ல் கருணாநிதி உருவப்படம் திறப்பு…. தமிழ்நாடு சபாநாயகர்….!!!!!

ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா நடைபெறும் என்றும் அவரின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என்றும் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என தெரிவித்தார்.  மேலும் இந்த திறப்பு விழாவில் தமிழக ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். முதலமைச்சரான பிறகு முதல் முறையாக கடந்த 19 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வர் டெல்லியில் இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்து, சட்டப்பேரவையில் கலைஞர் படத்திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |