நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வந்த கொரோனா இரண்டாவது அலையின் தாக்கமானது தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக குறைந்து வருகிறது. இதனால் அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் கோவாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி வரை ஊரடங்கை மேலும் நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடைகள், வணிக வளாகங்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட வழங்கப்பட்ட அனுமதி தொடர்கிறது என்றும், உடற்பயிற்சிக் கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.