உலகமெங்கும் கொரோன பரவல் வேகமாக பரவி வந்த சூழலில் பல்வேறு நாடுகளிலும் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் விமான சேவைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்த பிறகே விமானங்களில் ஏற பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இண்டிகோ விமானங்கள் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நுழைய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து புறப்படும் முன் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட்டுள்ளது. இதனால் 24ஆம் தேதி வரை அபுதாபி, துபாய், சார்ஜா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.