இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மேலும் செப்டம்பர்-30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.