இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் தனது சில கார்களுக்கு தள்ளுபடி சலுகைகளை தற்போது அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடி ஆகும். அதன்படி மாருதி சுசுகி ஆல்டோ காருக்கு 8000 ரூபாய் வரை ரொக்க தள்ளுபடி மற்றும் பத்தாயிரம் எக்சேஞ்ச் பேலன்ஸ், நான்காயிரம் ரூபாய் ஐ எஸ் எல் சலுகையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இருந்தாலும் சிஎன்ஜி கார்களுக்கு தள்ளுபடி கிடையாது.
செலிரியோ காருக்கு பத்தாயிரம் ரூபாய் வரை ரொக்க தள்ளுபடி மற்றும் 15 ஆயிரம் எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகின்றது. எஸ் பிரஸ்சோ காருக்கு 35 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதில் 15 ஆயிரம் ரூபாய் எக்சேஞ்ச் பேலன்ஸ் மற்றும் 4000 ரூபாய் வரை ஐ எஸ் எல் சலுகை உள்ளது. வேகன் ஆர் காருக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்க தள்ளுபடி,பதினைந்தாயிரம் ரூபாய் எக்சேஞ்ச் பேலன்ஸ் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் ஐ எஸ் எல் தள்ளுபடி வழங்குவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் இந்த தள்ளுபடி சலுகைகள் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளது.