நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.. மாநில அரசுகள் பாதிப்பு பகுதிகளின் தன்மையை பொறுத்து இந்த முடிவினை எடுத்து கொள்ளலாம் என்று பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இதை பின்பற்றியே தமிழக அரசும் ஊரடங்கு, கட்டுப்பாடு விதித்துள்ளது. அதே நேரத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவலை பொறுத்து அந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கொரோனா தொகை நோய் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பேரூராட்சியில் நாளை முதல் வரும் 4ஆம் தேதி வரை தளர்வின்றி முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.