தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் வந்தது. இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படாததால் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
எனவே ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் மற்ற ஆண்டு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதால் அனைத்து அனைத்து பேராசிரியர்களும், பணியாளர்களும் வரும் 9ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வருமாறு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.