ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கடலாடி தாலுகாவில் உள்ள மடத்தாகுளம் பொது கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும், அரசு புறம்போக்கு நிலத்தை உப்பளம் அமைத்து ஆக்கிரமிப்பதையும் தடுக்க கோரியும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு செயலாளர் விடுதலை சேகர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாநில துணை பொது செயலாளர் கனியமுதன், பாராளுமன்ற செயலாளர் கோவிந்தராஜ், தொகுதி செயலாளர்கள் கிட்டு, பழனிகுமார், சத்தியராஜ் என நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.