நீர் யானைகளால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆப்பிரிக்கா நாட்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருசிசி என்ற ஆறு பாய்ந்து ஓடுகிறது. இந்த ஆற்றில் எப்பொழுதும் நீர் வளம் வற்றாததால் நீர் யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. மேலும் ஆற்றில் வாழும் நீர் யானைக்கும் அதன் கரையில் உள்ள மனிதர்களுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அங்குள்ள மனிதர்கள் நாட்டின் கரையோரப் பகுதியை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோபமடைந்த நீர்யானைகள் அவ்வப்போது அங்குள்ள பலரை தாக்கி கொன்று வருகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள ஊர்களில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.