Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட இடமா….? முன்னாள் கவுன்சிலர் தற்கொலை முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்னாள் கவுன்சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் அதிமுக அம்மா பேரவை கட்சியின் துணை செயலாளரும், முன்னால் கவுன்சிலரான எம். எஸ் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.   இவர் தனக்கு  சொந்தமான நிலத்தில்  ஒரு ஷெட் அமைத்துள்ளார். அதில் இறந்தவர்களை அஞ்சலிக்காக வைக்கப்படும் குளிர்சாதன பெட்டிகளை பொதுமக்களுக்கு இலவசமாக  கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அந்த இடத்தை மூர்த்தி  ஆக்கிரமித்துள்ளதாக  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பொக்லைன் வைத்து அந்த ஷெட்டை இடிக்க வந்துள்ளனர்.  இதனை கண்டித்து எம். எஸ் மூர்த்தி தன் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது  காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.  மேலும் மூர்த்தி மற்றும் அவரது  ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

Categories

Tech |