Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்தது ஏன்?… பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

ஏரியை அக்கிரமித்தவர்களை  கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெசல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம்  உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |