Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு… பொதுமக்கள் எதிர்ப்பு… பா.ம.க நிர்வாகி தீக்குளிப்பு … பரபரப்பு…!!!

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பா.ம.க நிர்வாகி தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரிலுள்ள இளங்கோ தெருவில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் பொது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 29ஆம் தேதியன்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணிகளை அதிகாரிகள் ஆரம்பித்தனர். இதற்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொது மக்களின் எதிர்ப்பை மீறியும் படிப்படியாக வீடுகள் இடிக்கப்பட்டு வந்துள்ளனர். தற்சமயம் 150-க்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த கண்ணையா(55) என்பவர் பழக்கடை நடத்தி வருகின்றார். இவர் தனது வீட்டை இடித்துவிடுவார்களோ? என்ற பயத்தில் கடந்த சில தினங்களாகவே மன வேதனையில் இருந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் அதிகாரிகள் வீடுகளை இடிக்க வந்தபோது கண்ணையா திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டார். உடல் முழுவதும் தீ பரவி வலியால் அலறி துடிதுடித்து போனார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் ரமேஷ் ஆகியோர் தீக்காயமடைந்த கண்ணையாவை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்கள். மேலும் தீக்குளித்த கண்ணையா பா.ம.கவின் தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் என்பது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து கோபமடைந்த அப்பகுதி மக்கள் போலீசார் மீது கல்லை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 3 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். மேலும் இரண்டு பொக்லைன் இயந்திரத்தினை சேதப்படுத்தியுள்ளனர். இந்த தற்கொலை முயற்சியின் காரணமாக இளங்கோ நகரில் தற்போது வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்புக்காக 300-க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சென்னை ராஜா அண்ணாமலை புரம் கோவிந்தசாமி நகரில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் அவர்களுக்கு சென்னை பூர்வீகத்தை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்து அவர்களை வெளியேற்றுவது மனித உரிமை மீறல். அதை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் வீடுகளை அகற்றும் முடிவை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

Categories

Tech |