ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளைநாயகன்பாளையம் பகுதியில் இருக்கும் அச்சம்பட்டி ஏரியை பலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகராட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள் அந்த பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை விரைவாக காலி செய்யுமாறு அறிவுறுத்தினர். அதனை கண்டுகொள்ளாமல் சிலர் அங்கேயே வசித்து வந்தனர்.
இதனால் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தற்போது பெய்த மழை காரணமாக அந்த பகுதியில் தண்ணீர் தேங்கியால் பாதுகாப்பு கருதி அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து எடப்பாடி நகராட்சி கட்டிட ஆய்வாளர் இயற்கை பிரியன், வருவாய் அலுவலர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 4 வீடுகளை இடித்து அகற்றினர்.