Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டிய…. 44 வீடுகள், கடைகள் இடித்து அகற்றம்…. நாமக்கலில் பரபரப்பு….!!

ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுமார் 44 வீடுகள் மற்றும் கடைகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலை, தொட்டிபட்டி வையப்பமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அலவாய்ப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் பட்டீஸ்வரர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அப்பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கும், நெடுஞ்சாலை துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தினர் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை காலி செய்ய வலியுறுத்தி இறுதி நோட்டீஸ் அளித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆக்கிரமித்த இடங்களை காலி செய்ய தவறும் பட்சத்தில் அரசின் சார்பில் வீடுகள் இடித்து அகற்றப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். ஆனாலும் அப்பகுதியினர் வீடுகளை யாரும் அகற்றததால் அதிகாரிகள் அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் மற்றும் கடைகளை இடிக்க உத்தரவிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ்குமார், ராசிபுரம் துணை சுப்பிரடு அதிகாரி செந்தில்குமார், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதிக்கு சென்றுள்ளனர். மேலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுமார் 44 வீடுகள் மற்றும் கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியுள்ளனர். இதற்கு பின்னரே பொதுமக்கள் அவர அவசரமாக வீடுகளை காலி செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |