தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலை தயாரித்து கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடமிருந்து பெறவேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும். கோயில்களில் உள்ள சிலைகள் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும். கோவில்களில் வலுவான அறை அமைத்து சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகள், நகைகள் புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளத்தில் வெளியிடவேண்டும்.
கோவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க வேண்டும். கோவில் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக பகுத்து வெளியிட வேண்டும். கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். தொடர்ந்து மத்திய சிறை கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோவில் நிர்வாகம் தொடர்பான வழக்கின் உத்தரவுகளை 12 வாரத்தில் அமல்படுத்த உத்தரவிட்டனர்.