அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பா.ஜ.க கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாணக்காரன்புதூரில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரியும், தனி நபருக்கு ஆதரவாக செயல்படும் வருவாய்துறையினரின் செயலை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்க்கு பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துக்குமார், சேதுராமன், வெங்கடாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஒன்றிய பார்வையாளர் சதீஸ்குமார், பட்டியல் அணி மாநில தலைவர் பாலகணபதி, நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.