Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 12 ஏக்கர் நிலம்….. கடும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்….!!!!!!

ஊட்டி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட 12 ஏக்கர் நிலம் மீட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள்.

தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருக்கும் இடங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தயார் செய்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். இந்த வகையில் ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஆடா சோலை பகுதியில் இருக்கும் மேச்சல் நிலம் என்று வகைப்பாட்டில் இருக்கும் புறம்போக்குநிலம் 12 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று நிலத்தை ஆய்வு செய்தார்கள். பின்னர் அங்கே கேரட், முட்டைகோஸ், சொல்லிட்ட மழை காய்கறிகள் பயிரிடப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும் அத்துமீறி யாரும் அடையக் கூடாது எனவும் நிறுவ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை அங்கு வைக்கப்பட்டது.

Categories

Tech |