Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இடம்…. யாருடையது தெரியுமா….? அறநிலையத்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

கோவிலுக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மடம் ஒன்று தெற்கு வீதியில் அமைந்துள்ளது. இந்த மடத்தில் திருத்துறைபூண்டி சைவ செட்டியார்கள் குத்தகைக்கு எடுத்து முறையாக கோவிலுக்கு பணத்தையும் செலுத்தி வருகின்றனர். இதனை அடுத்து இந்த மடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகின்றார்.

தற்போது இந்த இடம் மிகவும் பழுதடைந்து விட்டதால் அங்குள்ள கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடத்தை எழுப்ப திருத்துறைப்பூண்டி சைவ செட்டியார்கள் அறநிலையத்துறை ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்ற அறநிலையத்துறையினர் கட்டிடத்தை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவின் பேரில் கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் மடத்திலேயே தொடர்ந்து குடியிருந்து வந்தார். இந்த நிலையில் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று நேற்று அந்த கட்டிடத்தை பொக்லைன் எந்திரன் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இதன் மூலம் கோவிலுக்கு சொந்தமான ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான இடத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

Categories

Tech |