Categories
உலக செய்திகள்

ஆக்கிரமிப்பு பிராந்தியங்களை…. பிரபல நாட்டுடன் இணைத்தது பயனற்றது…. உக்ரைன் அதிபர் சாடல்….!!

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியுள்ளது.

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 8 மாதங்களாக நீடித்து வருகின்றது. இந்நிலையில் போர் முடிவில்லாமல் நீண்டு வரும் சூழலில்  ரஷ்ய ராணுவ படைகளால்  ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் 4 பிராந்தியங்களில்  பொதுவாக்கெடுப்பு நடத்தி அவற்றை தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து சர்வதேச  சட்டத்துக்கு எதிரான இந்த இணைப்புக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் உக்ரைன் பிராந்தியாங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் சட்டத்தில்  அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது, “எங்கள் நிலத்தை கைப்பற்ற முயற்சிக்கும் எந்தவொரு ரஷ்ய முடிவும், எந்த ஒப்பந்தங்களும் பயனற்றவை. பயங்கரவாத நாட்டின் மதிப்பற்ற முடிவுகள் அவை கையெழுத்திடப்பட்ட காகிதத்துக்கு மதிப்பு இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |