Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்றாதது ஏன்?…. வசமாக சிக்கிய 2 பேர்…. அதிரடியாக உத்தரவிட்ட வன அலுவலர்….!!!!

வனப்பகுதியை ஆக்கிரமித்த 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் மூக்கனூர் பகுதியில் அமைந்துள்ள காப்பு காட்டில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.  . இதுகுறித்து சிலர் வனத்துறையினரிடம் புகார் செய்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வனத்துறையினர்  ஆக்கிரமிப்பு செய்த  பகுதிகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என கூறினர்.

ஆனால் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்நிலையில் நேற்று வனசரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சந்திரன் என்ற 2 பேர் வனப்பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் 2  பேரையும் மாவட்ட வன அலுவலர் அப்பலநாயுடு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர்களுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |