இயக்குனர் ஷாம் ஆண்டின் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கின்ற படம் ட்ரிக்கர். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் சீதா அருண்பாண்டியன் முனீஸ் கான்னி, ஜெயன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானலில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கின்ற இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றது.
Categories