கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக துருவா சர்ஜா வலம் வருகிறார். இவர் தான் பல வருடங்களாக காதலித்த பிரேரனா என்ற பெண்ணை பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் துருவா தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு கூடிய விரைவில் ஜூனியர் துருவா வரப்போகிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/CiCLz4Bu3ec/?utm_source=ig_embed&utm_campaign=loading
இந்நிலையில் நடிகர் துருவா ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரியின் மகன் ஆவார். நடிகர் துருவாவின் அண்ணன் தான் மறைந்த நடிகர் சிரஞ்சீவி. இவருடைய மனைவி மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது மாரடைப்பால் சிரஞ்சீவி உயிரிழந்தார். தன்னுடைய அண்ணன் மகன் ராயனுக்கு துருவா 10 லட்சம் மதிப்பில் வெள்ளித் தொட்டில் வாங்கிக் கொடுத்தார். மேலும் மேக்னா ராஜ் நடிகர் துருவா மற்றும் அவருடைய மனைவிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.