Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆக்சன் மற்றும் அட்வென்ச்சர் ஜானரில்” ராஜமவுலியின் புதிய படம் குறித்த மாஸ் அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

பிரபல இயக்குனர் தன்னுடைய அடுத்த படம் குறித்த  தகவலை கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தன்னுடைய அடுத்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ராஜமவுலி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ராஜமவுலி அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அவரிடம் செய்தியாளர்கள் உங்களுடைய அடுத்த படம் குறித்து சில தகவல்களை கூறுங்கள் என்று கேட்டனர்.

அதற்கு நான் இயக்கும் அடுத்த படம் ஆக்ஷன் மற்றும் அட்வென்ச்சர் ஜானரில் அமையும். இந்த படத்தின் படத்தின் கதை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப் பட்டுள்ளது என்றார். மேலும் நடிகர் மகேஷ்பாபு திரிவிக்ரம் படத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ராஜமவுலி இயக்கும் படத்திற்காண வேலைகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |