Categories
லைப் ஸ்டைல்

ஆக்சிஜன் அளவு சீராக…. உடனே இத மட்டும் பண்ணுங்க…. எளிய சித்த வைத்தியம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் லவங்கம், ஓமம், கற்பூரம், யூகலிப்டஸ் எண்ணெய் இவற்றைசேர்த்து ஒன்றாக கட்டி மோந்துவர உடலில் ஆக்சிஜன் அளவு சீராகும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இது முதலுதவி மட்டுமே. ஆக்சிஜன் குறைபாடு அதிகரிக்கும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என கூறியுள்ளனர். இதனை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது கற்பூரத்தின் அளவு குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

Categories

Tech |