தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கு ஐநாக்ஸ் மற்றும் சிவிஐடி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிப்காட் மூலம் நிலம், முத்திரை வரியில் 50% சலுகை, மின்சாரத்திற்கு 5 ஆண்டுகள் வரி விலக்கு அளிப்பதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுக்கு 30% மூலதன மானியம் உள்ளிட்ட சலுகைகளை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.