Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் கசிவு…. விசாரணைக்கு சுகாதாரத் துறை உத்தரவு..!!

மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதில் 22 உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளபோது  மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. லாரி டேங்கர் இன் வாழ்வில் ஏற்பட்ட பழுது காரணமாக லிக் ஆகியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் கூறியுள்ளார்.

Categories

Tech |