Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் கருவி சரியாக இயங்காததால்…. தபால்துறை ஊழியர் பலி…. உறவினர்கள் புகார்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஓய்வுபெற்ற தபால் துறை ஊழியர் எஸ்தர் மேரி என்பவர் உயிரிழந்துள்ளார். இதற்கு ஆக்சிஜன் பிரிவில் பணிபுரியும் ஊழியர் சரியாக கருவி இயக்காமல் அலட்சியமாக வெளியே சென்றதால் தான் உயிரிழந்துள்ளார் என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |