ஆக்சிஜன் இல்லை என்று கைவிரித்த தனியார் மருத்துவமனைகள். உத்தரபிரதேசத்தில் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அரசுக்கு தொடர்ந்து பல முறை கோரிக்கை விடுத்தும் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் வேறு இடத்திற்கு மாறி்க்கொள்ளுமாறு லக்னோவில் உள்ள மாயோ மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.