Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் கொடுங்கள்… டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள்..!!

ஆக்சிஜன் கொடுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து மாநில முதல்வர்கள் இடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதிலும் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. டெல்லியில் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து மாநில முதலமைச்சர்கள் இடமும் ஆக்சிஜன் வேண்டி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு உதவி செய்தாலும் இப்பொழுது கொரோனா காட்டும் தீவிரம் காரணமாக எவ்வளவு இருந்தாலும் அது போதவில்லை என்றும் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |