நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களில் பல்ஸ் ஆக்சி மீட்டர், ஆக்சிஜன் செறிஊட்டி கருவிகள் விலையை 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள் விலை கடந்த ஒரு வாரத்தில் ஆயிரம் ரூபாய் முதல் 2000 வரை அதிகரித்துள்ளது. மற்ற கொரோனா அத்தியாவசிய மருத்துவ கருவிகள் விலையும் கூட கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்துள்ளது.