Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாடு: இரும்பு & ஸ்டீல் நிறுவனங்களின்…. உற்பத்தியை நிறுத்த உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.இந்நிலையில் பஞ்சாபில் உள்ள இரும்பு மற்றும் ஸ்டீல் நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்த அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். இரும்பு மற்றும் ஸ்டீல் நிறுவனங்களில் ஆக்சிஜன் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Categories

Tech |