Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாடு என தவறான செய்தி வெளியிட்டால்… சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற தவறான செய்தியை பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா கோரதாண்டவமாடி வருகின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத் தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன.

இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை என செய்தி பரப்பினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என தொடர்ந்து செய்திகள் வெளியாகும் நிலையில் யோகி ஆதித்யநாத் இந்து எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Categories

Tech |