நாட்டில் ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி.
நாட்டின் பல்வேறு இடங்களில் ஆக்சிசன் தட்டுப்பாடு காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து நாட்டில் அதன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆக்ஸிஜன் தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும், ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.