இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். பொதுவாக ஆக்சிஜன் -183 டிகிரி செல்சியஸ் என்ற குறைவான வெப்பநிலையில் தான் சேமிக்க முடியும்.
40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும். விபத்துகளை தவிர்ப்பதற்காக இரவு நேரப் பயணங்களை அனுமதிப்பதில்லை. ஒரு டேங்க் ஆக்சிஜன் நிரப்ப இரண்டு மணி நேரம் எடுக்கும். இவை மற்ற இடங்களுக்கு செல்லக் கூடுதல் நேரம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.