ஆக்சிஜன் தேவைக்கு 104 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அது போன்ற சூழ்நிலை இதுவரை உருவாகவில்லை.
இருப்பினும் ஆக்ஸிஜன் தேவைக்கு 104 என்கின்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் ஆக்சிஜன் தேவை என்றால் 104 என்கிற அவசர எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை உறுதிப்படுத்த 24 மணி நேரமும் இந்த எண் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.